மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், மலேசியா Seremban, யாழ். கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா பூபாலராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குலவிளக்கு
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கு !
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Dearest Karuna Mami, children and families, Please accept our deepest sympathies and heartfelt condolences on the passing of Poopalarajah Mama. Am writing on behalf of my my parents Dr Siva and...