யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சுப்ரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகளை 26-11-2025 புதன்கிழமை அன்று மு.ப 11.30 மணிமுதல் பி.ப 5:00 மணிவரை நடைபெறவுள்ள அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் தாங்கள் குடும்பத்தாருடன் வருகைதந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.. ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!
முகவரி:
SALLE GOLDEN HOUSE
195 RTE DE SAINT-LEU,
93800 ÉPINAY-SUR-SEINE