யாழ். சாவகச்சேரி சப்பச்சி மாவடி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், பனர்கள் காட்சிப்படுத்திய நல்லுள்ளங்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும்வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிற்றம்பலம் வீதி,
மீசாலை கிழக்கு,
மீசாலை.
In Memory of Mr.T.Sinnathambi was beloved grandfather whoes kindness and wisdom touched all who knew him. He will be deeply missed but forever remembered. Rest in Peace.