Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAR 1937
இறப்பு 04 AUG 2024
அமரர் தம்பிப்பிள்ளை சின்னத்தம்பி
வயது 87
அமரர் தம்பிப்பிள்ளை சின்னத்தம்பி 1937 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி சப்பச்சி மாவடி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

விநாயகமூர்த்தி, யோகம்மா, மார்க்கண்டு, காலஞ்சென்ற சின்னத்தங்கம், கணேசு, சறோஜினிதேவி, இரத்தினம், புவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரவீந்திரன்(ஜேர்மனி), வாசுகி(ஜேர்மனி), வானதி, ரமேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்துமதி, சிவபாலன், சிவநேசன், விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிஷா, லக்ஸன், ஆருஷா, இனுஷ், பிரவீன், பிரன்யா, அனுதரன், துவாரகா, இந்திகா, விதுஷன், விபுலன், துவாரகன், விதுன், றதுஷா, றதுன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆதிரா, அகிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2024 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
சிற்றம்பலம் வீதி,
மீசாலை கிழக்கு,
மீசாலை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்