யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி, கனடா Scarbrough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம் அன்பு தெய்வமே!
31 நாட்கள் கடந்தும்
ஓயவில்லை உம் உயிருள்ள நினைவுகள்
அன்பாய் கதைக் கூறி அழுத்தமாய்
அரவணைத்து அனுபவத்தை அறிவுரையாக்கி
எமது வாழ்வின் வழிகாட்டியானீர்!
குருதியை வியர்வையாக்கி
கடமையை போர்வையாக்கி
விழுதாயிருந்து கழுகாய் காத்தீரே!
சொல்லாமல் பிரிந்ததேனோ
திரும்ப முடியாப் பாதையிலே!
நெடுவழிப் பயணம் செய்த நீர்
பயணிக்க முடியவில்லையென
பாதியிலேயே சென்றுவிட்டீரோ!
இம் மண்ணை விட்டு
இல்லை பயணம் முடிவுப்பெற்றதென
சென்று விட்டீரோ விண்ணிற்கு
கண்களில் நீர் சூழ கலங்கி நிற்கின்றோம்
உம் நிழற்படம் முன்னே...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.