யாழ் அல்வாய் அத்தாயை பிறப்பிடமாகவும் Switzerland, Scarborough, Mississauga வை வதிவிடமாக கொண்டவரும் Unique Display Electronic Inc. Cara Food Operation (Airport), KG Graphic Finishing, Canada Food Equipment Inc., Star Maintainants Inc. ஆகிய இடங்களில் வேலை செய்தவருமான ராஜா அண்ணா என செல்லமாக அழைக்கப்பட்ட திரு தம்பிமுத்து இராசலிங்கம் அவர்கள் தனது 58 வது வயதில் Mississaugaவிலுள்ள அவருடைய இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் பல வேலைத்தலங்களில் வேலை செய்த போது சக ஊழியர்களுடன் ஒற்றுமையாகவும், ஒரு Role model ஆகவும், Employersன் நம்பகமான Hardworker ஆகவும் இருந்தார் என்பதை சக ஊழியர்களும், Employersம் சொல்ல கேட்டோம். அதுமட்டுமல்ல அன்னாருடைய இல்லத்தில் நேரில் வருகை தந்து அவருடைய இழப்பை தாங்க முடியாமல் வாய்விட்டு அழுததையும் பார்த்தோம். குடும்ப வாழ்விலும் தன் மனைவியை யாரிலும் தங்கி வாழாமல் சொந்தவீடும், சொந்த வாகனமும், வங்கியில் வைப்பீடும் செய்து வைத்துள்ளார். தன் பிள்ளைகள் பட்டதாரிகளாகி உயர்ந்த பதவி வகிப்பதை நண்பர்கட்கும் உறவினர்கள்கும் கூறி மகிழ்ந்ததை பலரும் கூறக் கேட்டோம். சுருங்கச் சொன்னால் இந்த நாட்டில் Independent ஆகவும் சகல வசதிகளுடனும் தன் மனைவியை, பிள்ளைகளை வாழ வழி செய்து விட்டுத்தான் இவ்வுலகை விட்டு இறையடி சேர்ந்துள்ளார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம். கண்ணீருடன் உறவினர்