யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து ஹென்ஸ்மோகன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பே உருவான எங்கள் அப்பா
நாட்கள் 31 ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!
ஒருமுறையேனும் உங்கள் முகம் பார்த்து விடமாட்டோமா
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வினோவின் குடும்பத்தாருக்கும் துயரில் தவிக்கும் அன்பு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் அநுதாபங்களையும் ஆறுதலையும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் ஞானசேகரம் குடும்பம் 🙏