Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 JUL 1940
இறப்பு 29 MAR 2020
அமரர் தம்பிஐயா கனகலெட்சுமி
வயது 79
அமரர் தம்பிஐயா கனகலெட்சுமி 1940 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா கனகலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னையாய் எமை சுமந்து அரவணைத்து பாதுகாத்தாய்
அகம் நிறைந்து நாம் வாழ மன மகிழ்ந்து பூரித்தாய்!
தாயென்றொன்றில்லாமல் தரணியில் வாழ்வுமுன்டோ
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும் பெற்றவள்
அன்பு போல் வருமா? நம்மைப் பெற்றவளின்
தாய்மடியைத் தருமா? எத்தனை ஜென்பம் எடுத்தாலும்
உங்கள் பிள்ளைகளாக பிறக்க வேண்டும் அம்மா!

அம்மா எங்கள் உயிருடன் கலந்திட்ட உங்கள் உதிரம்
எம் உடலில் உள்ளவரை நீங்கள் எம் ஒவ்வொருவரின்
உயிருக்குள் உயிராக வாழ்வீர்கள் எம்முடன் நாம்
இவ்வுலகில் உள்ளவரை

எம் அன்னை ஈசன் பாதக் கமலங்களில் சரணடைந்து
இன்றோடு ஓராண்டு தெய்வத் திருமகளாய் வானுலகில்
நீங்கள் இருந்து நித்தமும் எமக்கு வழிகாட்டுமம்மா

இந்நாளில் அம்மா உங்கள் நினைவுகளால் எமை
நிறைத்து ஆத்மசாந்தி வேண்டி கலட்டி வரசித்தி
விநாயகரை வேண்டி நிற்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்