Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 FEB 1947
இறப்பு 30 JUL 2022
அமரர் தம்பையா செல்வரெட்ணம் 1947 - 2022 ஒமந்தை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா ஓமந்தை நாம்பன்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை மருதங்குளம், திருநாவற்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா செல்வரெட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று மறைந்தாலும்
அகலாது உங்கள்
அன்பு முகம் எம்மைவிட்டு

பண்பினை ஊட்டி
பாசத்தினை பொழிந்து பக்குவமாய்
எமை வளர்த்தீர்கள்

அப்பா என்ற வலிமையை நீங்கள்
இல்லாத காலங்கள்
எமக்கு உணர்த்தி நிற்கின்றது

இப்போது நாம் வாழும் வாழ்வின் பெருமைகளுக்குள்
உங்கள் வியர்வையின் துளிகள் தான்
ஒளிந்து எமை மெருகூட்டுகின்றன.

அணுவளவும் கலப்படமில்லா அன்பு உங்கள் உருவம்
காலம் உள்ளவரை கடவுளுக்கு நன்றி சொல்வோம்
உங்களை எமக்கு தந்தையாக தந்ததற்கு ...

இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம் அப்பா
நீங்கள் எம்மோடு
என்றே எம் மனம் புலம்புகின்றது நித்தம் நித்தம்

உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம் 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 31 Jul, 2022
நன்றி நவிலல் Mon, 29 Aug, 2022