மரண அறிவித்தல்
தோற்றம் 24 MAR 1935
மறைவு 10 AUG 2022
செல்வி தம்பையா செல்லையா தருமாவதி 1935 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, கொழும்பு கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா செல்லையா தருமாவதி அவர்கள் 10-08-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான கணேசன், மகேஸ்வரன், தருமதாசன் மற்றும் தேவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி, சின்னத்தங்கச்சி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வஜோதி- பமலா(லண்டன்), காலஞ்சென்ற பாக்கியஜோதி- இந்திராணி(வட்டுக்கோட்டை), ஜெயஜோதி(வட்டுக்கோட்டை), தவஜோதிராஜா- விந்தி(சீனா), காலஞ்சென்ற இரத்னஜோதிராஜா(வட்டுக்கோட்டை), பத்மயோகராணி- ஆந்திரே(ஐக்கிய அமெரிக்கா) மற்றும் தேவயோகராணி- சர்வேந்திரன்(கனடா) ஆகியோரின் ஆசை மாமியும்,

ரீனா, தருணன், சர்வினி, ரஞ்சித், கரோலின், அலின், அலிசன், ஜேசன், பிரியானா, ஏடிரியன், வஜ்ரன், துருத்ரா, விரோஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஜோசப், டெபி, ரெமி, சோபி, எமா, மைரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 1:00 மணியளவில் கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தம்பையா செல்லையா தேவராணி - சகோதரி