Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 SEP 1945
இறப்பு 07 AUG 2025
அமரர் தம்பையா சரஸ்வதி 1945 - 2025 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:27/07/2026
 
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை குமுழமுனை 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா சரஸ்வதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை அம்மாவே 
எம்மை விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓராண்டு ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழி நடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் அழியாது அம்மா

எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
எங்களது முன்னேற்றப் படிகளில் அம்மா
உங்கள் பாதம் பதிந்ததை
எப்படி மறந்திடுவோம்

பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதிவைத்த ஓவியமாய்
வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே

எங்கள் குடும்பத்தின் குல விளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனிடம் வேண்டுகின்றோம்..!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்