Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 JAN 1934
இறப்பு 09 SEP 2022
அமரர் தம்பையா குகதாசன் 1934 - 2022 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கரடிப்போக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 30-08-2023

ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்

அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்துகொண்டே இருக்கும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி
தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.
 ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...  

நீங்காத உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள்,

 மருமக்கள், பேரப்பிள்ளைகள், 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 10 Sep, 2022