1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உடுப்பிட்டி மொட்டை புளியடியைப்பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை திருவேற்காடை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா ஆனந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் ஆண்டு கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை !
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது...
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உங்கள் என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே !
சத்தம் இல்லாமல் சித்தம்
துடிக்க வைத்து மொத்தமாய்
எங்களை மோசம் செய்ததென்ன?
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
ஒன்று ஆண்டு என்றாலும்
பல ஆண்டு சென்றாலும்
உன் பிரிவை ஏற்கவில்லை எங்கள் மனம்
என்றும் உன் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
மிருணாளினி ஆனந்த ராஜா- மனைவி