Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 SEP 1950
இறப்பு 02 AUG 2023
திரு தம்பையா அழகியநாதன் 1950 - 2023 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சரவணை, கொழும்பு, பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா அழகியநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 22-07-2024:

அன்பின் திருவுருவே பாசத்தின் பிறப்பிடமே
எம்மை விட்டகன்று ஒரு சகாப்தம்
ஆயினும் உங்கள் நினைவுகள்
எமக்கு பல சகாப்தம்...

பக்குவமாய் எமை வளர்த்து
காத்து கல்வி அறிவு தனை
ஏற்றமுடன் அளித்து வையத்துள்
வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.

நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில் வாழுதையா!!!

ஓர் வருடம் ஆகியும் பத்து நிமிடம் கூட
உங்களை மறக்க முடிய வில்லை
எத்தனை உறவுகள் பல வந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
மனதை விட்டு விலகாது.

பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும் -
எம்மை பாசத்தின் சுமையோடு
அரவணைத்துக் காத்த -
எமது அன்புத் தெய்வமே அப்பா
உங்கள் நினைவலைகள் ’என்றும்
எம் நெஞ்சினில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 02 Aug, 2023
நன்றி நவிலல் Thu, 31 Aug, 2023