Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JAN 1963
இறப்பு 03 AUG 2024
அமரர் தம்பாபிள்ளை விமலாதேவி 1963 - 2024 வேலணை 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 108 1/2 சென் பெனடிக் மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை விமலாதேவி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமே
பாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு சென்றீர் எம்மை விட்டு!

அன்று நீங்கள் தாயாக இருந்தீர்கள்
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
ஆதலால் கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!
அழுத கண்கள் வரண்டு
ஆண்டு இரண்டு போச்சு

ஆண்டொன்று போனாலும்
அன்பு கொண்ட உள்ளம் தான் மாறிடுமோ
ஆயிரம் உறவுகள் இங்கிருந்தாலும்
உங்களைப் போல் உறவு இனி வருமோ?  

எத்தனை நாட்கள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தானே
எங்கள் இதயங்களின் வலியையும்
இழப்பின் வேதனைகளையும்
சொல்ல முடியாது வார்த்தைகளில்

நீங்காத நினைவுடன் ஈராண்டு
ஏக்கம் மட்டும் மிஞ்ச
நீர்த்துளிகள் நிறைகின்றன...
காலங்கள் கரைந்தாலும்
அழியாது உம் நினைவு 

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்