யாழ். சங்கானையை பிறப்பிடமாகவும், ஜோ்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பாபிள்ளை லோகேஸ்வரி அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்ப விருட்சத்தின் ஆணிவேராக இருந்து
விதையிட்டு நீரூற்றி எமை வளர்த்து
காய் காய்த்து கனிவுற்ற
இன் நாளில் நீங்கள் இங்கு இல்லை,
எங்களின் உயர்வுக்கும், மேம்பாட்டுக்கும் தங்களை ஈர்ந்து,
அன்பு, பண்பு, கருணையுடன் வாழ்வாங்கு வாழ்ந்து எமை வழிநடத்தி
பிரிவு என்ற துயரில் எம்மை விட்டு இறைவன் பாதமதை
சென்றடைந்த எமது அன்பு தெய்வங்கள் மறைந்து பல ஆண்டுகள் ஆயினும்,
இன்றும் எம்முன் அணையாத தீபங்களாய்
எங்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...
உங்கள் நினைவுடன் வாழும் பிள்ளைகள்:
சித்ரா முத்துலிங்கம்(இலண்டன்),
ரத்னா நிமலன் குடும்பம்(இலண்டன்),
முருகதாஸ் குடும்பம்(ஜோ்மனி),
சந்திரதாஸ் குடும்பம்(அவுஸ்திரேலியா),
சுபத்திரா பாலசந்திரன் குடும்பம்(ஜோ்மனி),
இந்திரா கமலநாதன் குடும்பம்(அவுஸ்திரேலியா)
மற்றும் சகோதரிகள், உற்றார், உறவினர்.