Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 NOV 1968
இறப்பு 03 JUL 2023
அமரர் தம்பியையா பாலசிங்கம்
பொதுமுகாமையாளர் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
வயது 54
அமரர் தம்பியையா பாலசிங்கம் 1968 - 2023 வெற்றிலைக்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வெற்றிலைக்கேணியைப் பிறப்பிடமாகவும், ஆழியவளை கொடுக்குழாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பியையா பாலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது ங்கள் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்!!

ஆயிரம் பேர் ஆறுதலில் ஆறினாலும்
உங்கள் பிரிவை நெஞ்சம் மறுக்குதப்பா!
நேற்றுப் போல் இருக்கின்றது
நாங்கள் வாழ்ந்த இன்ப வாழ்க்கை நினைவுகள்
யார் கண் பட்டதோஎங்கள் குருவிக்கூடு கலைந்தது! 

அன்பிற்கே சாவு என்றால் அகிலமே தாங்காதப்பா!
என்னுயிர் அப்பா வந்து விடுங்கோ!
ஏங்கி நாம் தவிக்கின்றோம். 

இந்த மண்ணில் உம்மைப் போல் யார் வருவார்?
ங்கள் துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos