 
                     
        திதி:12/09/2024
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா நித்தியானந்தன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் எட்டாகியது அப்பாவைப் பிரிந்து.
வையகம் போற்ற வாழ்ந்து
வானுறையும்
 தெய்வமதாய்
இயற்கையில் இணைந்து
 பழுதில்லாப் புதுமலராய் - என்றும்
 எம் இதயங்களில் மணம் வீசும்
 அன்பு நிறை அப்பாவே! 
ஆண்டுகள் எட்டு ஆனதே பிரிந்து..
உயர்குணமேவிய திருவுருவாய்
 வழிகாட்டி நிலவொளியாய் குளிர்மை
 தந்து தினம்
எமையெல்லாம் மனதாற்றி
 அகவொளியாய் நிறைமதியாய்
 குறைநிறைகள் எடுத்தியம்பி
நல்வழி
 காட்டிய உம் கருணையினை பேறாகப்
 பெற்றோம் பெருமை கொண்டோம்
 நீறாகிப் போனாலும் நீங்களே திசைகாட்டி
 நித்திய வாழ்வினில் நீங்கா நிறையுரு..
 அணையாது ஒருபோதும்
நாம் கொண்ட பாசம்
தேயாமல் வளருமிது தெய்வீக பாசம்..!
இயற்கையின் அசைவுகளில்
 உம்
உணர்வுகளை நுகர்ந்து
உம் 
பாதம் மலர் தூவி வணங்குகிறோம்.!
