7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று ஊற்றங்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா மகேஸ்வரி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு அம்மா!
நாங்கள் உங்களை இழந்து
ஏழு ஆண்டுகள் உருண்டுவிட்டன
நேற்று போல் அது நெஞ்சில் வலிக்கின்றது
இது தீராத நோய் மாறாத துன்பம்
அம்மா நீங்கள் விலகிய பிறகு
மூச்சுத் திணறியது சுவாசம் சுழித்தது
வாழ்வது கேள்விக்குறியாய் எழுந்தது
அம்மாவை இழந்ததற்குப்
பின்பு இனி வாழ்க்கையில்
இழப்பதற்கு ஒன்றும்
இல்லை என்று தோன்றியது
நீங்கள் இல்லை என்ற நினைவை விட
இருக்கின்றாய் என்ற கனவு நன்றாய் இருக்கின்றது
அம்மா நீங்கள் மேலுக்கும் மேலானவள் உங்கள் இழப்பு
பல வழிகளிலும் தாங்க முடியாதது..!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
மாமியின் ஆத்மா இறைவன் ஆடியில் அமைதி பெற வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.