5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று ஊற்றங்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா மகேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு உன் அன்பும் ஈடாகுமே அம்மம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்!!!!
தகவல்:
குடும்பத்தினர்
மாமியின் ஆத்மா இறைவன் ஆடியில் அமைதி பெற வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.