யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தருமராஜா கனகலட்சுமி அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி நாகபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தருமராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கலாதரன்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
தமிழ்ச்செல்வி(செல்வி- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
அஸ்வின்(பிரான்ஸ்), ஆருஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சந்தானலெட்சுமி, காலஞ்சென்ற பேரின்பநாதன், கலாநிதி(ஜேர்மனி), விமலநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோமசுந்தரம், மனோன்மணி, தேவராஜா(ஜேர்மனி), சத்தியவாணி(ஜேர்மனி), மதுசுதனன், பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 01:00 மணிவரை 2ம் வட்டாரம் மண்டைதீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைப்பெற்று, பின்னர் தலைக்கீரி இந்து மயானத்தில் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.