Clicky

பிறப்பு 15 JUL 1938
இறப்பு 06 DEC 2024
திருமதி தபோமணி கனகசபை
வயது 86
திருமதி தபோமணி கனகசபை 1938 - 2024 கரம்பொன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மகேந்திரமோகன் குமாரசாமி "அருளகம்" கரம்பொன் (CANADA) 15 DEC 2024 Canada

உறங்காத உள்ளமொன்று உணர்வோடு போராடி உறைவிடம் தேடியிங்கே உயிர் மடி சேர்ந்ததெங்கே? அலையலையாய் காரணங்கள் ஆயிரமாய் குவிந்தாலும் காலனவன் கவர்ந்திட்ட உன் இன்னுயிரை மீட்டிடுமோ? மெல்லமாய் உருகி அணைந்து விட்டது எம் பாச விளக்கு சொல்லிக் கொள்ளாமலே உதிர்ந்து விட்டது எம் உயிரின் முடிச்சு விடியல்கள் எல்லாமே விடியாமல் இருள்கின்றது - எங்கள் கன்னங்கள் எல்லாமே கண்ணீர் கனகோலம் போகின்றது! மண்ணில் மதிப்பொடு மலர்ந்து வளமாய் இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து விண்ணில் கலந்திட்ட எம் மண்ணின் உறவே! கண்ணில் நீர் சுமந்து உம் காலடியில் எங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம்! கரையும் கண்ணீரில் நிறையும் நினைவுகளுடன் குமாரசாமி-அருளமணி குடும்பத்தினர் (பெரிய மாமாவின் பிள்ளைகள்)