யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தபோமணி கனகசபை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது எல்லாம் உம் நினைவாக
துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தாயே!
ஒரு மாதம் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு தந்தையாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உறங்காத உள்ளமொன்று உணர்வோடு போராடி உறைவிடம் தேடியிங்கே உயிர் மடி சேர்ந்ததெங்கே? அலையலையாய் காரணங்கள் ஆயிரமாய் குவிந்தாலும் காலனவன் கவர்ந்திட்ட உன் இன்னுயிரை மீட்டிடுமோ? மெல்லமாய் உருகி அணைந்து...