1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
ஹற்றன் Norwood Estate ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், நோர்வேவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சில்வெஸ்ரர் யோசப் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று
உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும்
வரை உங்கள் நினைவிருக்கும்
அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.