யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் பாலேந்திரா அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதன், பூதாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற மண்டலநாயகம் இரத்தினதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலோஜினி அவர்களின் அருமைக் கணவரும்,
பூம்பொழில், உமாபங்கன், கலாநிதி உமைமைந்தன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
அஜந்தன், வைத்திய கலாநிதி சௌமியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆகாஷ், அனிதா, ஹரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி சிவராசா, இராஜராஜேஸ்வரி முதலியார், ஆனந்த குமாரசுவாமி மற்றும் புவனேஸ்வரி சண்முகலிங்கம்(சிட்னி, அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி சச்சிதானந்தன், ஸ்ரீ பாஸ்கரன், பேராசிரியர் சுசீந்திரராஜா, வைத்திய நிபுணர் மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைத்திய கலாநிதி செல்லப்பா, திருஞானசம்பந்தன், விக்கினேஸ்வரன், கோணேஸ்வரன், கமலலோஜினி வரதராஜா, அம்பிகா குகதாசன், நளினலோஜினி சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
A great person ,we pray him rest in the feet of almight.