வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் ஜெயகாந்தன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் உயிருக்கு உயிரான மகனே
கண்ணுக்கு புலப்படாமல் தான்
சென்றுவிட்டாய் நீ
உன்னை நினைக்கும்
கணங்கள் தோறும்
கண்களை காட்டாறாக
மாற்றிவிட்டாய் நீ
இன்றளவும் உன்னை
தொலைத்த நாட்களில்
இருந்து மீள முடியாமல்
தவித்து நிற்கின்றோம்
நீ எப்பொழுதும் எங்கள்
மனதில் வாழ்ந்து கொண்டிருப்பாய்
நீ எங்களிடம் திரும்பி வருவாய்
என நினைத்து உன்னை மறவாமல்
உன்னையே நினைத்து வாழ்ந்து
கொண்டிருக்கும் உன் உயிர்
உறவுகள் மற்றும் நண்பர்கள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.