1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுதாகர் இராமசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்றாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உன் பாசம்
கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தம்பியே!
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே!
நீ எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே!
ஒரு ஆண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உன் நினைவாய் வாழ்ந்திடுவோம் தம்பி!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
அம்மா, சகோதரன், சகோதரி குடும்பத்தினர்
தம்பி உங்கள் நினைவுகள் என்றும் எம்மோடு இருக்கும். ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் 🙏🙏🙏🙏🙏