

-
28 DEC 1963 - 29 JAN 2020 (56 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Trichy, British Indian Ocean Terr.
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுதாகர் புவனேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் அணையாத தீபமென
எண்ணி இருந்த எமதன்புத் தெய்வமே ஆருயிர் அன்னையே
எங்கள் பாசத்தின் திருவுருவே "அம்மா"
குடும்ப குல விளக்கு மறைந்து ஆண்டொன்று ஆனதே!!!
துணையாய் இருந்து ஆறுதல் அளித்தீர்
கண்ணின் இமையாய் காத்து நின்றீர்
உடம்பில் உணர்வாய் கலந்து இருந்தீர்
கண்கள் தவிக்க நெஞ்சம் துடிக்க
மறைந்து சென்றாய் ஏனம்மா?
நீ அன்புடன் பேசும் பேச்சு
உன் இரக்கம் கொண்ட உள்ளம்
கணிவுறும் உந்தன் எண்ணம்
நீ எம்மருகில் இருக்கையில்
துணிவாக நின்றிருந்தோம்
இன்று தாலாட்ட நீ இல்லை
தவிக்கின்றோம் தாயே
அகிலத்தில் ஏது இணை உனக்கு அம்மா
இணையில்லா தெய்வமே எம்தாயே
அருகிலிந்து ஆறுதல் கூற மீண்டும் வரமாட்டீரோ?
மறுபிறவி எடுத்து மண்ணில் வந்து
மீண்டும் எங்களுடன் சேர்வாயா அம்மா?
நீங்கள் மறைந்து விட்டாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
இதயத்தில் இருந்து இருபோதும் அழியாது
உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன் திருவடி நிழலில்
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka பிறந்த இடம்
-
Trichy, British Indian Ocean Terr. வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

கனவில் கூட நினைக்கவில்லை உங்களது பிரிவை. நீண்ட நாட்கள் உங்கள் தொடர்பை இழந்திருந்தேன். விரைவில் உங்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்தேன்.உங்கள் நகைச்சுவை நற்தமிழும் ,...