திதி: 11-07-2021
திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, Fribourg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுதா பிறேம்ராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எந்தன் இன்னுயிர் மனைவிக்கு!!
முதலில் எனக்குத் துணைவியானாய்
பிறகு என் தோழியானாய்
ஒவ்வொரு வினாடியும்
என் நாடியோடு நாடியாய் கலந்திட்டவளே!
நிறைவாக மணவாழ்வில்
நிறைவுடன் வாழ்ந்தோம்
பெற்றோரும் உற்றோரும்
களிப்புற கண்டோம்!
அறமோடு அன்பாக பணிகள்
ஒரு மனதாய் ஆற்றினோம்
அன்பான இல்வாழ்வில்
இரு பண்பான கண்மணிகளை
பெற்றெடுத்தோம்...
ஆருயிர் அம்மாவுக்கு.......!
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
பார்க்கும் பொருளெல்லாம் உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம் உங்கள் நினைவு!
கேட்கும் குரலெல்லாம் உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனை சென்றாலும்
மாறுமோ இன் நிலமை..?
பேச்சினிலே நீங்கள்!
சுவாசிக்கும் மூச்சினிலும் நீங்கள்!
எதிலுமே நீங்கள்! எல்லாமே நீங்கள்!!!!!
தொடர்புகளுக்கு
- Contact Request Details