Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 FEB 1986
இறப்பு 24 DEC 2021
அமரர் சுரேஸ் தர்மகுலசிங்கம்
வயது 35
அமரர் சுரேஸ் தர்மகுலசிங்கம் 1986 - 2021 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுரேஸ் தர்மகுலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

பேரன்புக்கு இலக்கணமாய் அவதரித்தவனே
ஆண்டுகளும் இரண்டாகி போனதையா
நம் ஆனந்தமான குடும்ப வாழ்க்கையும்
நிகர்க்கதியாகி போனதையா!

துன்பமென்று சொல்ல முடியாதவாறும்
கவலையென்று சிந்திக்காத அளவிற்கும்
இன்பமாய் என்னை அரவணைத்தவனே!
கோபப்படும் போது அன்புடன் கட்டியணைப்பவனே
கண்ணீர் விடும் பொழுது ஆறுதல் கூறி புன்சிரிப்புடன்
நகைச்சுவை கூறி என்னை சிரிக்க வைத்தவனே!

எண்ணிலடங்கா அறிவுரைகள், அளவுக்கதிமான
சுதந்திரம், ஆயிரம் மடங்கு நம்பிக்கை - என்மேல்
தீராக்காதல், வியக்குமளவு பாதுகாப்பு, அக்கறை
இத்தனையும் பாதியிலே இழந்துவிடுவேன் -என
ஒரு கணம் கூட நான் சிந்திக்கவுமில்லை -இப்பிடி
என்வாழ்வு நிலைமாறி போகுமென்று?

எதையும் மறக்கமுடியாமல் நடை பிணமாக
 தினம் தினம் உன் நினைவுகளுடன் - இந்த
 நரகத்தில் வலம் வருகின்றேன் நீயின்றி!
 நீ வருவாய் என! நீ வருவாய் என - தினமும்
என் வீட்டு வாசல் படியில் காத்துக்கிடக்கின்றேன்
ஆனால் காலச் சக்கரம் மட்டுமே சுழல்கிறது!

என் வேதனைகள் எதையும் வாய் விட்டு
சொல்லமுடியாமல் தவமாய் தவிக்கின்றேன்
விதியா? சாபமா? என் மனதில் -நிலை கொண்ட
காதலனாய், அன்புக் கணவனாய் குடி புகுந்தவனே
 என்னை விட்டு சென்றது ஏனோ?

என்மேல் பிரியம் கொண்ட உங்களை
காலனவன் ஏன் கூட்டிச் சென்றான்?
 எனத் தெரியவில்லை வாழ்ந்து முடிக்க முன்
 என் நெஞ்சம் இன்னும் ஆறவில்லை - உன்
 நினைவுகளுடன் ஏங்கித் தவிர்த்துக்
 கொண்டிருக்கும் உங்கள் ஆருயிர் மனைவி!

தகவல்: மனைவி

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 05 Jan, 2022