வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேன் செல்வநாயகம் அவர்களின் நன்றி நவிலல்.
மாதம் ஒன்றாகியும் மாறவில்லை
உன் மறைவு வலி
உன் சட சட பேச்சும்
உதட்டோரப் புன்னகையும்
என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்!
நாம் கண் தூங்க நினைத்தாலும்
விழிமடல் முழுதும் நீ தானே!
நிறைந்து நிற்கின்றாய்
நீண்டு நீ வாழ வேண்டும்
என்றே தானே நாம் விழித்திருந்தோம்
இடை நடுவில் எமைப் பிரிய
நாம் என்ன பாவம் செய்தோமோ?
மீண்டும் நீ வந்திட
ஒரு விந்தை தான் நிகழாதோ?
வித்துடல் மறைந்தாலும்
உன் நினைவுகள்
என்றும் எம்முள் புதைந்திருக்கும்!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
My dear brother, I love you even more. You always with us in our soul. No other things I have to mention. But we really missing you. ?