5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் சிவானந்தன்
வயது 56

அமரர் சுப்பிரமணியம் சிவானந்தன்
1963 -
2020
அனலைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவு ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை அப்பா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் இதயங்களில் இருந்து உங்கள்
ஞான ஒளி அணையாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We are extremely sorry to hear about your loss. He has definitely left an indelible impact, accept our deepest condolence.