Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 15 JUL 1932
இறப்பு 18 FEB 2026
திரு சுப்பையா சங்கரப்பிள்ளை
வயது 93
திரு சுப்பையா சங்கரப்பிள்ளை 1932 - 2026 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சங்கரப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

குடும்பத்தின் குல விளக்கே
நாட்கள் 31 போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் ஐயா!

உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!

உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
  இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.   

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.