Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 12 MAY 1959
உதிர்வு 02 JAN 2022
அமரர் சுப்பையா இராஜேந்திரன் (பாபு, ராஜூ)
முன்னாள் Maraichers பாடசாலை French ஆசிரியர், ௧ாங்கேசன்துறை நடேஸ் வரா௧ல்லுாரி தெல்லிப்பளை ம௧ாயணா௧ல்லுாரி பழையமாணவன்
வயது 62
அமரர் சுப்பையா இராஜேந்திரன் 1959 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், சாவகச்சேரி, பிரான்ஸ் Clichy, Pontault Combault ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 சென்றாலும் அகலவில்லை
எங்கள் துயரம்-எம்
விழிகள் முட்டி நிற்குது கண்ணீரால்
நீர் உம் விழி மூடிய நாள் முதல்...!
உருக்குலைந்து விட்டோம் உயிரோடு

உம் நினைவுகள் இன்றும் எம் மனதோடு
வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து கொண்டோம்
உம்மால்-இன்று

வாழ்வதன் அர்த்தம் கூட புரியவில்லை
இருந்தும் வாழ்கின்றோம்
வானில் விடிவெள்ளியாய் நீ
தோன்றுவதாய் எண்ணி...!!

உங்களுடைய ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். வீட்டு கிரியையும், அந்தியேட்டி கிரியையும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம் 20 Av. des Marguerites 77340 Pontault-Combault France எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.