Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 DEC 1953
இறப்பு 24 MAR 2023
அமரர் சுந்தரமூர்த்தி கலைவாணி
வயது 69
அமரர் சுந்தரமூர்த்தி கலைவாணி 1953 - 2023 மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சுந்தரமூர்த்தி கலைவாணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

மூன்று ஆண்டு ஒரு நொடிப் 
பொழுதில் ஆனதம்மா உங்கள்
 இழப்பை எம்மால் நம்பவே முடியவில்லை

மூன்று ஆண்டு கனப்பொழுதில் 
உருண்டோடி விட்டதம்மா உங்கள் 
பிரிவு எம் மனதை வாட்டுதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் 
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது எந்த 
உருவத்தில் நுழைந்தது என்று 
யாருக்கு தெரியும் அம்மா

உங்கள் பிரிவுக்கும் அந்த காலன் 
அவன் என்ன உருவத்தில் 
நுழைந்தானோ எங்கள் அம்மாவின்
உயிரைப் பறிப்பதற்கு உங்கள்
பிரிவுச் செய்தி இன்றும் ஆணிவேராய்
அடிமனதில் பதிந்ததம்மா எங்களால்
 மறக்கவே முடியவில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices