

யாழ். மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சுந்தரமூர்த்தி கலைவாணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறைந்த அன்பின் உருவம்....!!!!
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொழுதும்
தாரமாய், தாயாய் உங்கள் கஷ்டங்களை விடுத்து
என்னை நீங்களாக நினைத்து எந்த
குறையும் இல்லாமல் பார்த்த என் தாயே!
நாம் வாழ்ந்த வாழ்வை எண்ணி
தினம் தினம் வாடுகின்றேன் என் வாழ்வினிலே!
மரணித்துப் போன
என் மனைவியின் கல்லறையில்
நின்று மண்டியிட்டும்
மலர் தூவியும் அழுகின்றேன்
மீண்டும் ஒருமுறை அந்த வாழ்க்கை
எனக்கு கிடைக்காதா!...
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா
இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!! ஆனால்
இமைப் பொழுதில் காலன் உம்மைக் கவர்ந்துவிட்டான்
நீங்கள் எங்களை விட்டுச் சென்று
இன்றோடு இரண்டு ஆண்டு ஆகின்றன!
ஆனால் உங்கள் அன்பும் ஆசீர்வாதமும்
எப்பொழுதும் எங்களுடன் தான் இருக்கின்றது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!