யாழ். புன்னாலை கட்டுவன் சாரடிவழவைப் பிறப்பிடமாகவும், திருகோணலையை வதிவிடமாகவும், பிரித்தானியா Eastham ஐ வசிப்பிடமாக கொண்ட சுந்தரம் சின்னத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே எங்கள்
இதயங்களில் கோயிலாய்
வாழ்கின்ற அம்மாவே
நீங்காது எம் மனதில்
உங்கள் நினைவு தாயே
நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்
அகவை 31 நாட்கள் அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள் எம்
அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன்
நாம் வாழ ஏணியாக
இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சுந்தரகுஞ்சாச்சியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.