யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரம் சிற்பனை முருகமூர்த்தி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சண்முகவடிவேல் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 06.00 மணிக்கு முகத்துவாரம் அந்தியேட்டி மடத்திலும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் அவர் தம் இல்லத்திலும் அதனைத் தொடர்ந்து மு.ப 11.00 மணியளவில் நினைவு மலர் வெளியீடும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் ந.ப 12.00 மணிக்கு மதியபோசனம் இலங்கை விஸ்வகர்ம சங்கம் 168 ஸ்ரீகதிரேசன் வீதி கொழும்பு 13 என்ற இடத்தில் இடம்பெறும். இந்நிகழ்வுகளில் குடும்பசகிதம் கலந்து கொண்டு அமரர் தம் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் வண்ணம் பணிவுடன் வேண்டுகின்றோம்.
முகவரி:
16/4 BRASSFOUNDER STREET,
Colombo 13