

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரம் சிற்பனை முருகமூர்த்தி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சண்முகவடிவேல் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை(பொன்னையா), இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பன்னீர்ச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஜினி, சுகந்தினி, சுரேஷ்குமார், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை, ஞானசூரியன் மற்றும் ஞானாம்பாள்(பொற்கொடி), கருணைநாயகி (பவளம்), காலஞ்சென்ற தங்கவடிவேல் மற்றும் லோகநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற பகீரதலட்சுமி, ஜெயமோகனரெட்ணம், ரமணி, தெய்வேந்திரன், மற்றும் பாசுபதம், காலஞ்சென்ற காசிலிங்கம், மற்றும் பன்னீர்ச்செல்வம், அருட்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இதயவண்ணன், உதயகுமார், தர்ஷிகா, புஸ்பலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபித்தா, லகீஷன், சிந்துசன், மிதுஷ்கா, கர்விஷ், நிகாஷ், அனனியா, ஷஜேத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரெல்ல (Borella) Colombo-8 இல் அமைந்துள்ள ஜெயரெட்ணம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:30 மணியளவில் பொரெல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Mobile : +94740149557
- Mobile : +16476224728
- Mobile : +14168275866
- Mobile : +447990014448
- Mobile : +14164503984
- Mobile : +14168457774