Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 10 NOV 1950
இறப்பு 26 MAY 2023
அமரர் சுந்தரம் கருணாகரன்
வயது 72
அமரர் சுந்தரம் கருணாகரன் 1950 - 2023 யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். ஊரேழு மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் கருணாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை

31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!

எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!

31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது

உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்..!!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமரர் சுந்தரம் கருணாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு.

இந்துமகா சமுத்தரத்தில் இரத்தினம்போல் விளங்கும் ஈழநாட்டின் வடபாகத்தில் அமைந்த வளமிகு யாழ்பாணத்தில் உள்ள ஊரெழு என்னும் கிராமத்தில் வந்துதித்த உத்தமரே கருணாகரன். இவர் அமரர் சுந்தரம் சிவக்கொழுந்து தம்பதியினரின் இரண்டாவது மகனாக இந்துப்பரம்பரையில் வந்துதித்த நன்மகனாவார். ராஜாதுரை, சிவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனான இவர், அமரர்களான (சறோயினிதேவி,கிருபாகரன்,பிரபாகரன் ) பாஸ்கரன் ஆகியோரின் சகோதரும் ஆவார். பொறுமையும்,சாந்தமும் உள்ள இவரை பெற்றோர் ஊரெழு சிறுவர் பாடசாைலையில் கல்வி கற்பித்தனர். பின் உரும்பிராய் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போது தன் குடும்பமேம்பாடு கருதி தந்தையுடன் சேர்ந்து அரசகூட்டுத்தாபனத்தில் மேற்பார்வையாளராக கடமையாற்றினார். சிங்களமும்,தமிழும் நன்கறிந்த இவருக்குபெற்றோர் பெண்பார்த்து1978 ம் ஆண்டு அராலி தெற்கு வட்டுக்கோட்டையைச்சேர்ந்த அமரர் சீவரத்தினம் தம்பதியினரின் மகள் நவரசதேவியைக் கரம்பிடித்தார். இல்லறவாழ்வு இனிமையாகச் சென்றபோது இலங்கையின் இனக்கலவரத்தால் தனது சகோதரனின் வேண்டுகோளுக்கிணங்க சுவிஸ்நாட்டுக்கு வந்தடைந்தார். சுவிஸ் நாட்டின் தலைநகரமாம் பேர்ண்மாநிலத்தில் சொலிக்கோவன் என்னும் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குமேல் அருமைப்புதல்வி துஷாந்தினிக்கு அன்புத்தந்தையாக இருந்து வந்தார். நாற்பத்தைந்து வருடங்கள் தன் மனையாளுடன் இல்லறவாழ்வும் இனிய பேரக்குழந்தைகளான யெதுஷன்,யெதுஷரனுடனும் மகிழ்வாக வாழ்ந்து வந்தபோதுநித்திரையில் நீண்டதுயில் சென்ற அன்னார் அருள்மிகு ஞானலிங்கேஸ்வரனி் ச சிவனடியாருமாவார். இவரின் ஆத்மாசாந்தியடைய இறைவனின் பாதம் பணிகின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.