யாழ். வல்வெட்டித்துறை வடமராட்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுந்தரம் சந்திரலிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
😭ஒன்பதாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி😭
ஆண்டுகள் பல கடந்து போனாலும்....
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு அகலவில்லை..
அப்பா என்று அழைக்க மனம் ஏங்குகிறது..
இனி யாரையும் அப்படி அழைக்க முடியாமல்.. வேதனை தான் நித்தமும்..
நிழல் போல கூட இருந்து எங்களை வளர்த்தீங்க..
இப்ப அழுகையை மட்டும் தந்து மறைஞ்சிட்டீங்க..
மலை போல நின்று எம் மானம் காத்தவரே.
மனமெல்லாம் சோகத்தை தந்து
மண்ணிலே மறைந்து போன மாயம் என்ன..
உழைப்பு ஒன்றை மட்டும் உயிரா நினைச்சி
திரைகடலோடியும் திரவியம் பலதேடி.
குடும்பத்தின் ஆணிவேரா இருந்தீங்க...
ஊருக்கெல்லாம் தான தருமங்களை அள்ளி அள்ளி வழங்கினீங்க..
(இலங்கை) தீவின் நாற்புறம் தேடி தேடி
நட்புக்களையும் தோழமைகளையும்
உங்கள் நல்ல மனதால் கவர்ந்தீங்க..
அன்பு பாசம் கருணை நேர்மை
அறம் வீரம் இவற்றுக்கெல்லாம் அகராதியாக இருந்து..
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று
எல்லோருக்கும்
உணர்த்தி விட்டு சென்றீங்க...
இனி எங்கள் வாழ் நாளெல்லாம்..
உங்கள் வழிபின்பற்றி பிள்ளைகள் நாம் நெறி தவறாது
"சுந்தரம் சந்திரலிங்கத்தின்" பிள்ளைகள் என்றுபெயர்
பெற்று..
உம்மை இன்னும்
பெருமை படுத்துவோம்
அப்பா..
🙏🙏😭🙏😭🙏🙏
கண்ணீருடன்😭
பிள்ளைகள்...