யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் ஆழியாவளை கொடுக்குளையை வதிவுடமாகவும்.. (வல்வெட்டிதுறையில் அழைப்பது சின்ராசு) (மயிலிட்டியில் அழைப்பது பொக்கன்ரா) பின்னர் 1993 - 2017 காலப்பகுதியில் கனடாவில் வசித்து இறைபாதம் அடைந்தவர்.
அப்பாவுக்கு நினனவஞ்சலி...
ஆறு ஆண்டுகளாக
எம்மை எண்ணிலடங்கா துன்பங்களோடு..
பரிதவிக்கவிட்டு சென்ற எம் தந்தையே..!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எள்ளவும் குறையாது
உங்கள் மீதான பாசமும் நேசமும்..
எப்பொழுதும் உணர்ந்திடுவோம் உங்கள் நினைவுகளையும்
அதனோடான எங்கள் வாழ்வியலையும்..
ஆயிரம் சொந்தங்கள் எமக்கு இருந்தாலும்
அன்போடு எம்மை அணைக்க நீங்கள் இல்லையே..
எங்கள் உச்சரிப்பு அகராதியிலிருந்து
அப்பா என்ற சொல் உதிர்ந்து போனதே..
எங்கள் வீட்டுச் சூரியன் பகலிலே அஸ்தமனமானதே!
வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளலே
வாழ்க்கையின் தடத்தினிலே நீங்கள் விட்டு சென்ற
பாதையிலே நாங்கள் நடக்கின்றோம்..
திரைகடலோடியும்
திரவியத்தை சேர்த்தீர்...
அலைகடல் யாவும் உங்கள் சொந்தம்.
ஆழக்கடலையும் அளந்து பார்த்த அகாயசூரன்..
எதற்கும் அஞ்சிடாத அசராத வீரன்
ஈழத்தின் நாற்புறமும் உங்கள் நட்பாளர்களே.
உவந்து அளிக்கும் கொடையாளரே.
வம்சத்தின் தலவிருட்சமே அப்பா..
விழுதுகளாய் நாம் கண்ணீருடன்..
ஆண்டுகள் கழிவதனால் ஆறிடாது எம் துன்பம்..
அன்போடு எம்மை அள்ளி அணைத்திடும் அறிய பொக்கிசமே..
அலைமோதுகின்றது
எம் உள்ளம்..
வாழ்க்கை பயணமதில்
நீங்கள் விட்டுச்சென்றதை
நாம் தொட்டுச்செல்வோம்..
கண்ணீர் கடலின் நடுவிலே கரைதேடி அலைகிறோம்
எங்கே போனீர்கள்..
அப்பா..!
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்..