Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 MAR 1951
இறப்பு 21 SEP 2026
திருமதி சுந்தரலிங்கம் திலகவதி 1951 - 2026 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் திலகவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆண்டவன் அடி சேர்ந்து
நாட்கள் 31 ஆயிற்று!
 ஆனாலும் நாம் அழுகின்றோம்
 அம்மா அம்மாவென்று

கண்மணிகளாய் எமை
ஆளாக்கிவிட்டு காற்றோடு
 போய்விட்டீர்களே! கண்களில் நிறைந்த
நீருடனே- நாம் கலங்குகின்றோம்
 அம்மா அம்மாவென்று

பாசத்தோடும் பண்போடும்
எமை பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும்
எம் சந்ததிக்கு ஒளி விளக்காய்
ஒளி தந்து வழி நடத்துங்கள் அம்மா!

வலிகள் தொடரும் போதும்
 வழிகளை வலிமையாக்கி
வாழ்கின்றோம் அம்மா
உன் நினைவோடே...!
 ஆண்டுகள் பல சென்றாலும்
 ஆறாது எம் நெஞ்சம்...!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.