Clicky

பிறப்பு 06 MAY 1935
இறப்பு 03 JAN 2020
அமரர் சுந்தரேஸ்வரி செல்வலிங்கம்
வயது 84
அமரர் சுந்தரேஸ்வரி செல்வலிங்கம் 1935 - 2020 வதிரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

London 04 JAN 2020 United Kingdom

இன்று (03/01/20) கனடாவில் இறைவனடி சேர்ந்த எங்கள் குடும்ப உறவுகளின் மூத்த அக்காவான என்றும் எனது பாசத்துக்குரிய சுந்தரி அக்காவின் ஆத்மா சாந்தியடைய குடும்பத்தவர்கள் உறவினர்கள் ஊரவர்கள் நண்பர்கள் சகிதம் இறைவனை வேண்டி நிற்போம்..! எப்போதும் என்னை வாழ்த்தும் போது அம்மாளாச்சி உனக்கு அருள் தருவார்... என்று சொல்லுவியள்..! சின்ன வயதில் எனது வாழ்வின் அரைவாசி நாட்கள் உங்களின் வீட்டில்தான்..! எவ்வளவு சந்தோஷமான பசுமையான நினைவுகள் அவை..! நினைக்கவே மனம் வெதும்புகின்றது..! உங்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் பாசமும் உங்களைப் போல உயர்ந்தவையே..! உங்களின் நல்ல குணத்துக்குத்தான் நல்ல குணம் கொண்ட பாசத்துக்குரிய ஒரு பப்பா கிடைத்தார்..! பிள்ளைகளுடன் மட்டுமல்லாது எல்லோருடனும் பாசத்துடன் பழகும் , உங்களின் நினைவுகள் என்றும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்..! உங்களின் இழப்பால் மிகவும் துயருற்று இருக்கும் பப்பா சியாமளா சபேசன் சசி சுசி சத்தி இவர்களின் கண்ணீர்த் துளிகளுடன் பாசத்துக்குரிய தம்பி முரளி..!

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 04 Jan, 2020
நன்றி நவிலல் Fri, 31 Jan, 2020