யாழ். வல்வெட்டித்துறை கத்தோக்கடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சிவகுரு அவர்கள் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அன்னமாணிக்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானந்தலீலா, சிவானந்தராணி, சிவானந்தமலர், சிவானந்தமணி(லண்டன்), சிவானந்ததேவி(இந்தியா), சிவானந்தபுஸ்பம், சிவசிதம்பரம்(லண்டன்), சிவசோதிலிங்கம்(லண்டன்), சிவானந்தசுந்தரி(இந்தியா), சிவகுமார், சிவகணேஷ்(லண்டன்), சிவசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செந்தில்வேல், சிவானந்தராஜா, ஜஸ்டின் பெர்னாந்து, மற்றும் சிவதாஸ்(லண்டன்), சுந்தரலிங்கம், கமானி(லண்டன்), ராகினி(லண்டன்), பிரவீன்(இந்தியா), பவானி, ராஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.