யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரராசா செல்வகுரு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் பிறவி எடுத்தாலும்
உங்களது துயர் மனதை விட்டு நீங்காது...
ஈருயிர் ஓருயிராக இணைந்து வாழ்ந்தோம்
தனியனாய் தவித்தின்று
எப்பிறவியில்
உங்களை நான் இனி காண்பேன்
என எண்ணி ஏங்குகின்றேன்...
அன்பு பண்பு பாசத்தோடு
நல்ல கணவராய் வாழ்ந்த
வாழ்கையை
எண்ணி மனம் மாய்ந்து
துன்பத்தில்
துவண்டு துவள்கிறேன்...
அப்பா உங்கள் மகனாக பிறந்த -நாள்
முதலாக உன் பாசமுகம் பார்த்திருந்தோம்
எம் ஆசை அப்பாவே உன்னோடு
எம் வாழ்நாள் முழவதும் இணைந்து
வாழ்வோமென மகிழ்ந்திருந்தோம்...
எங்கள் பாசவலையறுத்து
பாதியிலே
பிரிந்து விட்டாயென
உருகி
உள்ளம் வெதும்பியே
கதறுகின்றோம் தந்தையே..
வையத்தில் நீ வாழ்ந்தபோது
வாழ்வெமக்கு வசந்தமாய் ஆனது
வானுறையும் தெய்வத்துள் கலந்தபோது
வாழ்வே எமக்கு கசந்து விட்டது...
தரணியில் உங்களுக்கு இணையாருமில்லை
தவிக்கின்றோம் உன் பாசம் பரிவு ஏதுமின்றி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...