யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுவில் வீதி மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலக்ஷ்மி இராமசாமி ஐயர் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று மருதடிவிநாயகர் பாதார விந்தங்களை சரண் அடைந்தார்.
அன்னார், சுவர்க்கஸ்ரீ குருசாமிக்குருக்கள் சீதா லக்ஷ்மிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுவர்க்கஸ்ரீ இரத்தினக்குருக்கள் சீதாலக்ஷ்மி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுவர்க்கஸ்ரீ இராமசாமி ஐயர் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரம்மஸ்ரீ இ.வாசுதேவன்(உப அதிபர் யா/உயரப்புலம் குணபாலன் வித்தியாலயம்), பிரம்மஸ்ரீ இ.வாமதேவன்(வரி ஆலோசகர், கணக்காய்வாளர், Vamadevan & Co) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீமதி தேஜோவதனி வாசுதேவன், ஸ்ரீமதி கவிதா வாமதேவன்(ஆசிரியை-யா/மானிப்பாய் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வன் வா.திவ்யக்ஷன் அவர்களின் அன்புப் பாட்டியும்,
சுவர்க்கஸ்ரீ கமலாதேவி சுப்பிரமணிய சாஸ்திரிகள், சுவர்க்கஸ்ரீ குமாரசாமி சர்மா, ஸ்ரீமதி சறோஜாதேவி பரமேஸ்வரசர்மா, சுவர்க்கஸ்ரீ சகுந்தலாதேவி வைத்தீஸ்வரசர்மா, சுவர்க்கஸ்ரீ சண்முகநாதசர்மா, சுவர்க்கஸ்ரீ வைத்தீஸ்வரக்குருக்கள்(மணி ஐயா), சுவர்க்கஸ்ரீ கோபாலன் சர்மா(தம்பிமாமா), செல்வி ஜானகிதேவி, சுவர்க்கஸ்ரீ யோகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2025 புதன்கிழமை அன்று நடைபெற்று, பின்னர் பி.ப 01:30 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
ஸ்கந்த புஷ்கரணி,
மானிப்பாய் ரோட்,
உடுவில்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details