Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 SEP 1972
இறப்பு 11 JAN 2025
அமரர் சுஜீவா விஜயகுமார் (ஜீவா)
உடுவில் மகளிர் கல்லூரி பழைய மாணவி
வயது 52
அமரர் சுஜீவா விஜயகுமார் 1972 - 2025 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவில் கற்பக்குனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுஜீவா குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் வீட்டு குல விளக்கே அம்மா
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்

கண்ணின் இமை போல் எமை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயர வைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்று ஆனதம்மா ஓராண்டு

ஓராண்டு காலமதில் உனை பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உனை மறவாமல்
நாம் வாழ்கின்றோம் எத்தனை ஆயிரம் உறவுகள்
எமை அணைத்திட இருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?

ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாது எம் துயரம்
நீங்காது அம்மா எம் மனதில் உன் நினைவு
இன்னொரு பிறப்பு ஒன்று உண்டெனில்
உன் பிள்ளைகளாக மட்டுமே
நாம் பிறந்திட வேண்டும் அம்மா! 

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் முதலாம் ஆண்டு திதி 01-01-2026 வியாழக்கிழமை அன்று பி.ப 06:30 முதல் பி.ப 08:30 மணிவரை Shree Ghanapathy Temple, Wimbledon, 125-133 Effra Rd, London SW19 8PU, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயகுமார் (ஜீவா) - கணவர்

Photos