சுஜி..!!நாம் பேசிக்கொண்டதில்லை நலம் விசாரித்துக்கொண்டோம்..!! பார்த்ததில்லை பக்கத்தில் இருந்திருக்கின்றோம்..!! அவ்வப்போது கண்டு ரசித்த புகைப்படத்தில் உன் புன்னகை மட்டும் நிழலாடும் என் மனத்தில்..!! ஏனோ இனம்புரியாத ஈர்ப்பு உன்னுள் எனக்கு..!! கொடுவினை வந்து கொண்டுயிர் போனதோ மானிலத்தில்..!! மறுமுறை பிறந்து வா தங்கையே.. நாம் முகம் பார்த்து முறுவலித்து புன்னகைகள் பரிமாறி கதை பேசிக்கழித்திருப்போம்..!! ஒரு முறை ஏனும் முகர்ந்து முத்தமிடக் காத்திருக்கின்றேன் சென்று வா தேவதையே..!! அரக்க பூமியில் குறைக்கணக்கில் உன்னைப்படைத்த இறைவனை சபித்து விட்டு கூறுகிறேன்..!!சென்று வா தங்கையே..!! மீண்டுமொரு முறை பிறப்பெடு நீ விட்டுச்சென்ற சுவடுகளில் கண்ணீர் வற்றிப்போக..சென்று வா மகளே சென்று வா..!! பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் கரங்கள் பலம் கொடுக்கட்டும் பிருந்தா ராஐன் நண்பி சுவிஸ்