மறக்க முடியவில்லை எங்கு சென்றீர்கள் பெரியம்மாவே அன்பான எங்கள் பெரியம்மாவே எங்கு சென்றீர்கள் எல்லோரையும் விட்டு விட்டு எங்கு சென்றீர்கள் உங்களை பார்க்க என்று நான் கனடா தேசம் வந்த போது நான் பெற்ற அனுபவங்கள் என்னைகண்டதும் அன்பால் அரவணைத்து முத்தம் மிட்டு என்னை சிரிக்க வைத்தீரகள் என் அம்மாவை பிரிந்து நான் உங்கு நின்ற வேளை என் கவலைகளை மறக்க வைப்பதற்காக பல கதைகள் சொன்னீர்கள் எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு கேட்டு செய்து ஊட்டினீரகள் நான் எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்கிறேன் என்னால் மறக்க முடியவில்லை நங்கள் ஒவ்வொரு முறையும் அப்பம்மாவை பார்க்க போகும் போதெல்லாம் என்ன சாப்பாடு செய்து தர என்று செய்து தருவீர்கள் இரவுவேளை எல்லோரும் வீட்டில் இருந்து கதைக்கும்போது என் கதைகள் கேட்பதற்காக என் அருகில் வந்து இருந்திடுவீர்கள் பெரியம்மாவே இப்போ எங்கு சென்றீர்கள் அடுத்து முறை கனடா வரும் போது எல்லோரும் சேர்ந்து வாங்கோ என்று சொல்லிட்டு நிங்கள் எங்களை விட்டு போனதன் காரணம் தான் என்ன பெரியப்பா தீபன் அண்ணா திவானி அக்காவிற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் தவிக்கிறேன் என்றும் உங்கள்நினைவில் பெறாமகன் சாருயன் யேர்மனி